இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வந்த சிவிங்கி புலிகள் இனம் அழிந்து விட்டது. இதனையடுத்து இந்திய மண்ணில் சிவிங்கி புலி இனத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. அந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக நமீபியாவில் 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதோடு ...
கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாணிபவுடர் கலந்த நீரை குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி. மேட்டுப்பாளையத்தில் உள்ள கடை குறித்த புகாரில் நடவடிக்கை கோரி இரண்டாவது முறையாக தற்கொலை செய்ய முயன்ற பரிதாபம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. ...
கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆமந்தக் கடவை சேர்ந்தவர். முருகன் ( வயது 49) கூலிதொழிலாளி. இவரது மனைவி கலாமணி ( வயது 45) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் .அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முருகனின் மனைவி கலாமணி உடல் நலக் குறைவால் திடிரென்று ...
கோவை : சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் புகழ் ராஜா (வயது 37) இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பொது வார்டுக்கு ...
கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நாளை (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயின் கோவில்களின் அருகாமையில் செயல்படும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி ,பன்றி இறைச்சி, கடைகளை மூடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் ...
கோவை : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் வித்யா ( வயது 21 ) இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். இவருக்கு நேற்று திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள ஒரு ...
சமீப ஆண்டுகளாகவே பல்வேறு வகையான கொடிய தொற்று நோய்கள் தீவிரமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. கொரோனா பெருந்தொற்று தொடங்கி எபோலா, H3N2 இன்ஃப்ளூயன்ஸா, பறவை காய்ச்சல், மங்கிபாக்ஸ் என பலவிதமான தொற்று பரவல் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது புதிய வகை தொற்று பாதிப்பு ஒன்று உலகிலேயே முதல் ...
சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும். சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்த முதல்வர் பூபேஷ் பாகேல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் ...
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் சென்று கொண்டு இருந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விடாமல் இருக்க திருப்பிய போது எதிரே மின் ...
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கோவில்கள், மடங்களில் உள்ள அரிய, பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பராமரித்து பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதையொட்டி ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக்குழுவை அறிவித்தார். இந்த குழு ...













