கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாணிபவுடர் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி..!

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாணிபவுடர் கலந்த நீரை குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி.

மேட்டுப்பாளையத்தில் உள்ள கடை குறித்த புகாரில் நடவடிக்கை கோரி இரண்டாவது முறையாக தற்கொலை செய்ய முயன்ற பரிதாபம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் கோத்தகிரி சாலையில் ஓடந்துறை செக் போஸ்ட் அருகில் வாடகை அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உரிமையாளர் கூறியதை அடுத்து இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தர மறுத்துள்ளார்.

இதனிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடையை உடைத்து சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சிலர் திருடி சென்று உள்ளனர். இதனை அடுத்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சாதிக் பாட்ஷா புகார் கொடுத்துள்ளார்.

காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் எப்.ஐ.ஆர் இதுவரை போடவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது இவர் தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போதே போலீசார் இவரிடம் எச்சரித்து அனுப்பினர்..