போர்ட் பிளேர் : அந்தமான் – நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கேம்பெல் என்ற பகுதியின் வடக்கில் நேற்று நண்பகல் 1.15 மணி அளவில் சுமார் 10கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோளில் 4.9 ஆக பதிவானது. ...
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா உருவானது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கொரோனா எப்படித் தோன்றியது என்பது குறித்து இதுவரை தெரியாமலேயே இருந்து வந்தது. இதனிடையே சீனா ஆய்வாளர்களே இது குறித்த முக்கிய டேட்டாக்களை பகிர்ந்துள்ளனர், கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவியது. அதன் பிறகு அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தர்மபுரி பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பி உரசி காட்டு யானை உயிரிழந்ததால் வனப்பகுதி மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்குமாறு தமிழக அரசு வனத்துறை மற்றும் மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ...
தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடி நாளை மதியம் 2:45 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் பாஜகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மூன்று மணியளவில் திறந்து வைக்க உள்ளார். இதனை ...
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாறு அன்பு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 28) கூலி தொழிலாளி .இவர் நேற்று அவரது வீட்டில் ஹீட்டர் போட்டு குளித்துக் கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது தந்தை ...
சூலூர் அருகே அதிகாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கோவை, கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதி பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு விவசாயி. இவருடைய மகன் நந்தகுமார். அவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்ல முடிவு செய்தார். ...
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் உலகையே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் எத்தனையோ உயிர்கள் இந்த தொற்றுக்கு பலியாகின. குறிப்பாக, இந்தியாவிலும் கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளினால் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் ...
நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காட்டில் உயிருடன் இருக்கும் மூதாட்டியை சுடுகாட்டில் உறவினர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் எச்சரித்தும், அவர்கள் மூதாட்டியை ஏற்க மறுத்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு மூணாற்று பிரிவில் சுடுகாடு உள்ளது. இங்கு நேற்று மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக கட்டிலில் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அவரிடம் ...
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும், உயிரிழப்புகளை தடுக்க முடிந்ததே தவிர, நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல்வேறு வகையிலான கொரோனா வைரஸால் ...
கோவை: ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களது 5 மாத பெண் குழந்தை பிரதிக் ஷா அந்த குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று காரில் குருவாயூர் கோயிலுக்கு சென்றனர். அங்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் ...













