கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, தென்றல் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 45) ஐ .டி .ஊழியர். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்று இருந்தார்.பின்னர் கல்லார் பகுதியில் உள்ள 17- வது தூரி பாலத்துக்கு சென்றார்.பாலத்தின் மேல் நடந்து செல்லும் போது 30 அடி உயரத்தில் ...
கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாடா காப்பி நிறுவனத்திற்கு சொந்தமான சங்கிலிரோடு பேக்டரி டிவிசன் பகுதியில் குடியிருந்து வரும் வடமாநிலம் ஜார்க்கண்டை சேர்ந்த பிப்பையா மாகாளி மற்றும் கீத்தாதேவி ஆகியோர்களின் மகன் சிறுவன் ஆகாஷ் வயது 5 என்பவர் இன்று தனது குடியூருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகேயுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து ...
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 629 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1900 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது. முதலில் 2019ஆம் ஆண்டு சீனாவில் இந்த கொடிய வைரஸ் பரவ தொடங்கியது. உலகம் முழுவது கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா ...
போர்ட் பிளேர் : அந்தமான் – நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கேம்பெல் என்ற பகுதியின் வடக்கில் நேற்று நண்பகல் 1.15 மணி அளவில் சுமார் 10கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோளில் 4.9 ஆக பதிவானது. ...
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா உருவானது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கொரோனா எப்படித் தோன்றியது என்பது குறித்து இதுவரை தெரியாமலேயே இருந்து வந்தது. இதனிடையே சீனா ஆய்வாளர்களே இது குறித்த முக்கிய டேட்டாக்களை பகிர்ந்துள்ளனர், கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவியது. அதன் பிறகு அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தர்மபுரி பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பி உரசி காட்டு யானை உயிரிழந்ததால் வனப்பகுதி மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்குமாறு தமிழக அரசு வனத்துறை மற்றும் மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ...
தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடி நாளை மதியம் 2:45 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் பாஜகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மூன்று மணியளவில் திறந்து வைக்க உள்ளார். இதனை ...
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாறு அன்பு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 28) கூலி தொழிலாளி .இவர் நேற்று அவரது வீட்டில் ஹீட்டர் போட்டு குளித்துக் கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது தந்தை ...
சூலூர் அருகே அதிகாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கோவை, கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதி பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு விவசாயி. இவருடைய மகன் நந்தகுமார். அவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்ல முடிவு செய்தார். ...












