மக்களே உஷார்… சென்னையில் வேகமெடுத்த கொரோனா… ஒரே நாளில் 629 பேருக்கு பாதிப்பு …தீவிரம் காட்டும் சுகாதாரத் துறை..

மிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 629 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1900 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது. முதலில் 2019ஆம் ஆண்டு சீனாவில் இந்த கொடிய வைரஸ் பரவ தொடங்கியது. உலகம் முழுவது கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 5,357 பேர் தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர், சனிக்கிழமையை ஒப்பிடும்போது இது குறைவாகும்.

தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று உயர்ந்துக்கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 369 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு என்பது 1,900 அக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய தினம் 172 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் இறப்பு எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை. சிங்கப்பூரிலிருந்து வந்த 3 பேருக்கும், அரபு நாடு மற்றும் தாய்லாந்திலிருந்து வந்த இருவருக்கும் என மொத்தம் 5 வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் இதுவரை 35,99,018 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4,573 ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 369 மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 113 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 500 –க்கும் கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது 629 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் 37 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கேரளாவில் அதிக தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 32,814 பேர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறப்பு சதவீதம் 1.19 சதவீதமாக உயர்ந்துள்ள்து. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய பொது சுகாதார துறை மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் தலைமையில் சில தினங்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் தினசரி ஆர்டிபிசிஆர் பரிசோதனை 11,000 –மாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் போதிய படுக்கை வசதிகள் மற்றும் மருந்துகள் கையிருப்பில் இருப்பதாகவும் மா. சுப்பிரமணியமன் தெரிவித்துள்ளார்.