உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 – ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக் கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் – கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் ...

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் அகற்றப்படாமல் தேங்கிய குப்பைகளால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் தினமும் 1000 டன் குப்பை சேகரமாகின்றன. இவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொண்டு போய் கொட்டப்படுகின்றன. குப்பை சேகரிக்க வசதியாக மாநகரில் சாலையோரங்கள், குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைத் தொட்டிகள் ...

கோவில்பட்டியை அடுத்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் மீது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதியது. வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே ...

வெப்ப சலனம் காரணமாக, 24.05.2023 முதல் 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36). இவர், அப்பகுதி மலையடிவாரப்பகுதியில் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மாலையில் மாடுகளை வீட்டிற்கு அழைத்து செல்லுகையில் 3 மாடுகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே தன்னுடைய நண்பர்கள் சிலரை உடன் அழைத்துக்கொண்ட மாரியப்பன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ...

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கவர்ச்சிமிக்க, மற்றும் ஜொலிக்கக்கூடிய பொருட்கள் என்றாளே மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வரிசையில் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கம் தான். தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட ...

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த வினோத் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சரவணவேலு மற்றும் சாதனாதேவி இருவரும் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனாதேவி பத்தாம் வகுப்பு அவினாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளியிலும், அதேபோல அவரது மகன் சரவண வேலு ராமலிங்க செட்டியார் பள்ளியில் படித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ...

கோவை : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பர்மா காலனி சேர்ந்தவர் ஜன ரட்சகன் ( வயது 56) கூலி தொழிலாளி. இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிறை காவலர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...

கோவை போத்தனூர் பிள்ளையார்புரம், தெற்கு ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகள் விஜயலட்சுமி ( வயது 20) பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் நாகரத்தினம் என்பவரை காதலித்து வந்தாராம்.இதை அவரது பெற்றோர்கள் கண்டித்தனர்.இதனால் விஜயலட்சுமி கடந்த 2 மாதங்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் இந்த நிலையில் நேற்று அவரது ...

சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் கிட்டான்..இவரது மகன் பிரகாஷ் ( வயது 22)இவர் நெகமம் பக்கம் உள்ள ஆண்டி பாளையத்தில் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். நேற்று இவர் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்றார்.அப்போது திடீரென்று கிணற்றினுள் தவறி விழுந்து இறந்தார்.இதுகுறித்து இவரது தந்தை கிட்டான் நெகமம் ...