கோவை : திருச்சி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை ( வயது 42 )இவர் சூலூர் அருகே உள்ள காரணம்பேட்டையில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் கோவை- திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் பைக் ...
சேலம்: பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, சேலத்தில் இருந்து பல்கலைக் கழகம் செல்லும் சாலை நெடுக, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ...
சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. ...
சென்னை: ஆம்புலன்ஸ் வரும்போது சிக்னலில் எச்சரிக்கை செய்யும் புதிய தொழில்நுட்பம் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் மற்றும் சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடி சிகிச்சை அளித்தால் அவர்கள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேநேரம், நெரிசல் மிகுந்த ...
சங்ககிரி: ‘கர்நாடகாவை போன்று தமிழகத்தில் டீசல் விலையை குறைத்தால், ஓராண்டில், 4,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்,” என, தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சண்முகப்பா பேசினார்.சேலம் மாவட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 49வது மகாசபை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் கந்தசாமி தலைமை வகித்து, லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல், ...
மக்கள் பாதிப்படையவேண்டும் என்ற நோக்கில் கோவிட் 19 என்ற உயிர் ஆயுதத்தை சீனா வேண்டுமென்றே உருவாக்கியதாக வூகான் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார். சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்த அந்த வைரஸ் இந்தியா உட்பட ...
தாலுகா அளவில் பணியாற்றும் 120 எஸ்ஐக்களை ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாளுடன் ஓய்வு பெற உள்ள அவர் இன்று நடந்த பாராட்டு விழாவில் பேசிய போது, 2008ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 120 எஸ்.ஐ.க்கள் ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் காவல் ...
தமிழகத்தின் இரண்டாவது பெண் பேருந்து ஓட்டுநர் – சேலத்தில் களமிறங்கிய தமிழ்செல்வி.! சமீபத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார். இவரைத் தொடர்ந்து சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராக களத்தில் இறங்கியுள்ள பெண்ணுக்கு பொதுமக்கள் ...
சர்வதேச போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம்,வட வீர நாயக்கம்பட்டி உள்ள நாடார் சரஸ்வதி கல்லூரியில் தேனி மாவட்ட காவல்துறையினரால் போதை இல்லா இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு சம்பந்தமான நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்டதாக சில காவல்துறை அதிகாரிகளுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ...
கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம்,பகத்சிங் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ்.இவரது மகன் சூர்யா (வயது 19)குடிபழக்கம் உடையவர்.எந்த வேலைக்கும் சரிவர செல்வதில்லை.இந்த நிலையில் தனது தாயிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கூறினாராம்.அதற்கு அவர் மறுத்தார்..இதனால் மனம் உடைந்த சூர்யா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ...













