“போதையில்லா இந்தியா” தேனி காவல்துறையினரால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு.!!

சர்வதேச போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம்,வட வீர நாயக்கம்பட்டி உள்ள நாடார் சரஸ்வதி கல்லூரியில் தேனி மாவட்ட காவல்துறையினரால் போதை இல்லா இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு சம்பந்தமான நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்டதாக சில காவல்துறை அதிகாரிகளுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதைப் பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நாடகங்கள் பாடல்கள் பாடிய கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தப்பட்டது. இந்திகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆர்.வி .சஜீவனா  மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரவீன் உமேஷ் டோங்ரே தேனி மருத்துவக் கல்லூரியின் தாளாளர் டாக்டர்  மீனாட்சிசுந்தரம் ,நாடார் சரஸ்வதி கல்லூரி தாளாளர் பழனியப்பன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் கலந்து கொண்டனர்..