ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளி வருவதை முன்னிட்டு மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் மாநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச்செயலாளர் பி.அழகர் என்பவர் 60-அடி நீளத்திற்கு பிளக்ஸ் வைத்துள்ளார். ...
விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக ...
கோவை மாவட்டம் ஆனைமலை.புது விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 36) அங்குள்ள வசந்தம் நகரில் இளநீர் கடை வைத்துள்ளார்.இவர் நேற்று தனது உறவினர்கள் 4 பேருடன் காரில் ஆனைமலையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஈச்சனாரி மேம்பாலம் அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் ...
ஆந்திரா: பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 40 பேருக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது 30 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து ...
கனிம வள கொள்ளையை தடுக்க, கனிம பொருட்களை வாங்கும் போது, அரசு அனுமதி சீட்டையும் நுகர்வோர் கேட்டு பெறவேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வர, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.’குவாரிகளில் புல தணிக்கை என்ற பெயரில் கூடுதல் அபராதம் விதிப்பதோடு, பல கோடி ரூபாய் மாமூல் கேட்கின்றனர்’ என்று கூறி, தமிழக குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் ...
லக்னோ: அயோத்தியில் உள்ள சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசு கப்பல், சுற்றுலா படகு இல்லம் போன்ற சேவைகளை உத்தர பிரதேச அரசு தொடங்கவுள்ளது. இது குறித்து உத்தர பிரதேச சுற்றுலாத்துறையின் துணை இயக்குனர் ஆர்.பி யாதவ் கூறியதாவது: அயோத்தியில் உள்ள சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசு கப்பல் மற்றும் படகு இல்லம் சேவைகள் தொடங்கப்பட ...
இலங்கையில், ஆற்றில் மூழ்கிய பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில், நேற்று (ஞாயிற்று கிழமை) 67 பயணிகளுடன் அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேருந்து ஒன்று, பொலன்னறுவை அருகே சென்று கொண்டு இருக்கையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று மானம்பிட்டியவில் கொட்டாலிய பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்து கோர விபத்தில் ...
டெல்லியில் வரலாறு காணாத அதிகனமழை காரணமாக முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால் அங்கே பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் டெல்லி உட்பட பல நகரங்களில் கனமழை பெய்துள்ளது. டெல்லியில் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இது 1982-க்கு பின் ...
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். படித்தும் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு சிலர் நன்கு படித்தும் தவறான பழக்கங்களால் வழி தடுமாறி செல்கிறார்கள். இத்தகைய சூழலுக்கு மத்தியிலும் ஒரு சிறுவன் 18 வயதில் டாக்டராக பட்டம் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து சில வருடங்கள் பிறகு கலெக்டராகவும், தொழிலதிபராகவும் ...
சென்னையில் உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்பம் மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று மாலை திடீரென பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், பகுதிகளில் பரவலான மழை பெய்தது. அதேபோல் அண்ணா ...













