சென்னை: பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார், ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை ...
கோவை: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மதுக்கரை வனச் சரகத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையிலான இந்த கண்காணிப்பு அமைப்பை, வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்துப் பேசியதாவது: கோவையில் மனித – யானை மோதல் கணிசமாக ...
கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், விவேகானந்தர் சதுக்கத்தில் தனியார் நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த எடிசன் (வயது 25) என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். நேற்று வெல்டிங் செய்யும் போது திடீரென்று தீப்பிடித்தது. இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது . தீ தொழிற்சாலை முழுவதும் ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம், வையாபுரி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் . இவரது மகள் பிரிசில்லா ( வயது 23 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதுநிலை பட்ட மேற் படிப்பு படித்து வருகிறார் .இவர் கல்லூரிக்கு கட்ட வேண்டிய செமஸ்டர் கட்டணம் ரூ 40 ஆயிரத்தை தொலைத்துவிட்டார். இதை இவரதுதாயார் கண்டித்தார் ...
கோவை உக்கடம் அல் அமீன் காலணியில் வசிப்பவர் ரகுமான். ஏ.சி. மெக்கானிக் . இவரது வீட்டில் இன்று அதிகாலையில் என் ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதே போல கோவை போத்தனூர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஷாநவாஸ் என்பவரது மகன் நாசர் என்பவரது வீட்டிலும் என் ஐ. ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி ...
சென்னை: சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு, ‘இ – மெயில்’ வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளது.சென்னை நந்தம்பாக்கம், அண்ணா நகர், கோபாலபுரம், பெரம்பூர் உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு, நேற்று (பிப்.,8) காலை 10:00 மணியில் இருந்து, மாலை 3:40 வரை, இ – ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை தனது மனைவி, தாயார் மற்றும் குழந்தையுடன் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டார். காரை பாலகுமார் ஓட்டினார். மாலை 5:45 மணிக்கு கோவை – பொள்ளாச்சி சாலையில் ஏழுர் பிரிவு அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து ...
கோவை பீளமேடு வி. கே. ரோடு , தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகானி (வயது 48) உத்ரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்து தனியார் பம்ப் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவரது மனைவி மற்றும் குழந்தைகள் உத்தர பிரதேசத்தில் உள்ளனர். சம்பவத்தன்று ...
கோவை மாநகர வடக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சந்தீஷ். இவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் .இவருக்கு பதிலாக வடக்கு பகுதி புதிய போலீஸ் துணை கமிஷனராக ரோகித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இவர் இன்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் சென்னை அண்ணாநகர் ...
கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுகள் அனைத்தும் அங்குள்ள 11 அடி ஆழ செப்டிக் டேங்கில் உள்ளது. அதை 2 வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை செப்டிக் டேங்கில் தேங்கி இருக்கும் கழிவுகளை ...












