கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீர் சோதனை..!

கோவை  உக்கடம் அல் அமீன் காலணியில் வசிப்பவர் ரகுமான். ஏ.சி. மெக்கானிக் . இவரது வீட்டில் இன்று அதிகாலையில் என் ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதே போல கோவை போத்தனூர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஷாநவாஸ் என்பவரது மகன் நாசர் என்பவரது வீட்டிலும் என் ஐ. ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது..

இன்று சோதனை நடந்த இடங்கள் விவரம் வருமாறு:

1.அல் அமீன் காலனி – ஹபிபுல்லா வீடு.

2.அருள் நகர் (அன்புநகர்) – அபுதாகீர் வீடு.

3.என்.எஸ்.கார்டன் – பைசல் ரகுமான் வீடு.

4.அற்புதம் நகர் – சலாவுதீன் வீடு.

5.கரும்புக்கடை கிரீன் கார்டன் – அனீஷ்முகமது.

6.பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம் – கமீல் வீடு

7.குனியமுத்தூர் ராஜூநகர் – சுதிர்முகமது வீடு

8.சீரபாளையம் மதுக்கரை – முகமது அலி ஜின்னா வீடு

மேலும் 4 இடங்கள்.

பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்து விட்டது. செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.