கோவை: பஞ்சாப் ,அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் விவசாயி ஒருவர் பலியானார். இதனால் அந்த விவசாயின் அஸ்தியை கிஷான் மஸ்தூர் மோட்சா என்ற விவசாய அமைப்பின் தலைவர் சர்வன்சிங் உள்ளிட்ட விவசாயிகள் நாடு முழுவதும் எடுத்துச் சென்று வருகிறார்கள். தற்போது ...

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு. கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 8ம் தேதி வரை சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக, திண்டுக்கல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு ...

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் மாபெரும் நீர்த்தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். நிலத்தடி கடல் என்று குறிப்பிடப்படும் இந்த பிரம்மாண்டமான நீர்த்தேக்கம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 700 கி.மீ. ஆழத்தில் உள்ளது ...

குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி, இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பு பதிவு ஆவணத்தில் பதிவான நிலையில், பிறப்பு பதிவுக்கான படிவம் 1-ல் சில திருத்தங்களுடன் ...

மயிலாடுதுறை மாவட்டத்தில் உலா வரும் சிறுத்தை மீண்டும் ஒரு ஆட்டை கொன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நெருக்கடி காரணமாக விலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து கொள்வதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் ...

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏடிஎம் இயந்திரங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை கொண்டுவர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் தற்போது வரை டெபிட் கார்டுகள் மூலம் பணம் டெபாசிட் செய்து வரப்படும் சூழலில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ...

கோவை மாவட்டத்தில்கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை பழத்தோட்டம் ரெஸ்ட் ஹவுஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ( வயது 49 )மேட்டுப்பாளையம் வனச்சரக சுண்டப்பட்டி பிரிவில் வனகாவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் நேற்று மதியம் வனக்காப்பாளர் ராஜ்குமார், வேட்டை தடுப்பு காவலர் நாகராஜ் ஆகியோருடன் ...

கோவை : கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் லே-அவுட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 51) இவர் நேற்று சத்தி ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த மினி டோர் ஆட்டோ இவர்மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் ...

கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின் மாற்றியில் திடீரென தீ பிடித்து எரிந்து உள்ளது. அந்த தீ அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் ...

புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர்களும் தேர்தல் அலுவலருமான மா.பிரதீப்குமாா், ஐ.சா. மொசி ரம்யா அகியோா் ஆய்வு செய்தனா். இங்குள்ள மின்னணு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ள அறைகளை ஆய்வு செய்த திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் ...