சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டிடங்கள், 18 சிறைகள், சீர்திருத்தத்துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகள், 58 தீயணைப்பு மற்றும் ...
தமிழக நிதியமைச்சரின் திட்டத்தினால் முதல்வர் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் இருக்கிறார். இவர் நீதித்துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். இவர் பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாடு மாநில தணிக்கை குழு என்ற அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதாவது இந்திய அரசு துறைகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கு சிஏஜி என்ற ...
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் ரூ.166.50 கோடியில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மணப்பாறை, செஞ்சி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூரில் புதிய ...
டெல்லி: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை ஆதரித்து 174 எம்பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ஆளும், எதிர்க்கட்சிகள் தரப்பில் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் ...
மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுதியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில், பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் ...
இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” எனப் பேசியது விவாதமானது. ...
கேரளாவில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் ...
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. அதற்கு தலைமை வகித்து பேசிய அமித் ஷா, “ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் ...
சென்னை: கோடை வெப்பத்தால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் வறண்டுள்ளன. நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வண்டல் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் ...
மும்பையில் பரவியதாக கூறப்படும் புதிய வகை “எக்ஸ் இ” கொரோனா தமிழகத்தில் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான “எக்ஸ்இ” என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. ...













