இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று ...

சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் முருகப்பெருமாளின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் பல நூறு கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு கான்ட்ராக்ட் ...

தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ...

சென்னை: அதிமுக அலுவலகத்தின் சீலை நீக்கி அதன் சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து, ...

பிரிட்டன்  முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் புதன்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக தலைமைப் போட்டியின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளனர். சுனக் 137 வாக்குகள் பெற்று டோரி எம்.பி.க்களின் ஐந்தாவது சுற்றில் வெற்றி பெற்றார், இரண்டாவது இடத்தில் உள்ள டிரஸ் 113 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றார். முன்னாள் ...

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக கூட்டணி சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். ...

புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்தார்.இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு வரும் 28-ஆக. 8ல் நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 215 வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் 141 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பெரன்சிங்’ மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கடந்து வந்த கடின பாதைகள் ...

‘அக்னிபாதை திட்டம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் இளைஞர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். ராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டியில் பாஜக முன்னாள் ராணுவப் பிரிவு சார்பில் அக்னிபாதை திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடக்கிறது. இப்பயிற்சி முகாமை பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை நேற்று ...

அதிமுகவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், பொருளாளராக செயல்பட கோரி வங்கிகளுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் உள்ள தனது அனுமதியில்லாமல் வங்கி பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது என்று வங்கிக்கு கடிதம் எழுதிய ஓ பன்னீர் செல்வத்தின் கோரிக்கைகளை வங்கிகள் நிராகரித்தன. அதிமுக ...

சென்னை: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தி தமிழகத்தில் 3 நாள் நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது நடை பயணத்தில் ஏராளமான காங்கிரசார் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான முயற்சிகளை கட்சியின் மூத்த ...