அதிமுகவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், பொருளாளராக செயல்பட கோரி வங்கிகளுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டன.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் உள்ள தனது அனுமதியில்லாமல் வங்கி பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது என்று வங்கிக்கு கடிதம் எழுதிய ஓ பன்னீர் செல்வத்தின் கோரிக்கைகளை வங்கிகள் நிராகரித்தன.
அதிமுக சார்பில் கரூர் வைஸ்யா மற்றும் இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. இந்த இரண்டு வங்கிகளிலும் சுமார் ரூ.300 கோடி வரை இருப்பு உள்ளது. கரூர் வைஸ்யா வங்கியில் மட்டும் அதிமுக கணக்கில் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் நிரந்தர வைப்பு தொகை உள்ளது.
இந்த வங்கிகளின் மேலாளர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், ‘அதிமுக வரவு-செலவு கணக்கை தன்னை கேட்காமல் மேற்கொள்ளக் கூடாது என எழுதி இருந்தார்.
தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுகவின் வங்கி கணக்குகள் தொடர்பாக வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கட்சியின் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் வங்கிக் கணக்குகளை கையாள்வார் என்று எழுதியிருந்தார்.
கடந்த 12ஆம் தேதி வங்கிகளுக்கு எடப்பாடி எழுதிய இந்த கடிதத்தையும், அத்துடன் இணைக்கப்பட்ட ஆதாரங்களையும் சரிபார்த்த வங்கிகள் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்றுக் கொண்டன.
எதிர்வரும் 25 தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது, அதற்கு தேவைப்படும் தொகையை புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் காசோலை மூலம் வங்கியை நாடியுள்ளார். அதற்கு வங்கி ஏற்றுக்கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலைச்சர் பன்னிர்செல்வம் வெறும் கடிதம் மட்டுமே அனுப்பியிருந்தார், அதற்கு தேவையான போதுமான ஆவணங்கள் சேர்க்காத காரணத்தால் அவரது கோரிக்கையை வங்கிகள் ஏற்கவில்லை.
ஆனால் ஆவணங்களுடன் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையில் கட்சியில் நிலவி வரும் அதிகாரச் சண்டையினால், வருவாய்த் துறை சார்பில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தது.
தலைமை அலுவகம் யாருக்கு என்பது இன்னும் சற்று நாட்களில் தெரிந்துவிடும் என்ற நிலையில், முதலில் வங்கிக் கணக்குகளை இயக்கும் உரிமையை எடப்பாடி தரப்பு பெற்றுவிட்டது
Leave a Reply