விருதுநகர்: குஜராத்தில் இன்று டிஜிட்டல் திருவிழா நடக்க உள்ள நிலையில், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் பிரதமர் மோடியுடன் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெற்ற பயன் குறித்து கலந்துரையாடுகின்றனர். குஜராத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் ...

தென்னிந்திய மாநிலங்களே பாஜகவின் அடுத்த இலக்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், செயற்குழு ...

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவில் பதவிக்காக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோர் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், தானே பொதுச்செயலாளர் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும் 3ஆம் ஆட்டத்தில் இணைய காத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் ...

2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று முதல் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே நேரத்தில் சார்மினார் பாக்கியலட்சுமி தேவியை தரிசிக்க முக்கிய விஐபிக்கள் வரக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ...

சென்னை: பம்ப்செட், கிரைண்டர் மீதான வரி உயர்வு வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வெட் கிரைண்டர், விவசாய பம்ப்செட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி ...

மும்பை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 39 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் பெரும்பான்மை பலத்தை இழந்ததால், அவர் முதல்வர் பதவியை ...

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3,92,70,000 செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கி வருகின்றன. இதற்கென ...

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அந்த பதவி தற்போது இல்லையென இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. ...

அனுமதியின்றி காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே.அப்பு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ...

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிக அளவில் அதிகரித்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க ...