அ.தி.மு.க- வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான இரு அணிகளும் சட்ட ரீதியாக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில், வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அதிமுகவில் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், ...

டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு, கொரோனா பரப்புவர், ...

பிரதமரைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சென்னையில், நடக்க உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொள்ள ...

பிரிட்டனில் அடுத்த பிரதமரைத் தோந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் போட்டி, இதுவரை இல்லாத பன்முகத்தன்மை கொண்டதாக சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில், அதிகபட்ச எண்ணிக்கையில் வேறுபட்ட இனம், நிறம், மதங்களைச் சேர்ந்தவா்கள் போட்டியிடுகின்றனா். கரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட முறைகேடு புகாா்களில் சிக்கிய தற்போதைய பிரதமா் போரிஸ் ஜான்ஸன், தனது பிரதமா் பதவியையும் ஆளும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட அனைத்து கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வால்பாறை நகராட்சி நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.செந்தில்குமார் ...

சென்னை: நேற்று அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இதில் அவர் குறிப்பிட்டதாக வெளியான சில விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்ததாக பொன்னையன் பேசிய ஆடியோ நேற்று இணையம் முழுக்க வைரலானது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ...

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில் அடுத்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனை நியமிக்க அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உடன் மிகவும் நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர். பொறியாளரான இவர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராகவும் உள்ளார். மேலும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் பதவியில் உள்ளார். இவரது மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக உள்ளார். அதிமுக ...

நடிகரும் , முன்னாள் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி. சேகர் நேற்று பாஜக தமிழக பாஜகவின் தலைமையகம் கமலாலயத்திற்கு சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசியிருக்கிறார் . முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினராக இருந்த எஸ். வி. சேகர் உடன் படங்களுக்கான தணிக்கை , சென்சார் போர்டு விவகாரம் குறித்து நீண்ட நேரம் ...

சென்னை: விருதுநகரில் பெண்ணை தாக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதவி விலகாவிட்டால் அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும், திமுகவின் மூத்த நிர்வாகியாகவும் இருப்பவர் அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், தமிழ்நாடு அரசின் ...