ஓபிஎஸ் உடன் இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் திடீர் சந்திப்பு..!!

னைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என நடிகர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ் இவ்வாறு கூறினார்.

அதிமுகவிற்கு உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்றும் அத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சியையும் எமாற்றத்தையும் ஏற்படுத்தியது தீர்ப்பாகும், இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எரித்து எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனுவை பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார், மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இபிஎஸ் மேல் முறையிட்டு மனு இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார், இதன்படி விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வத்தை திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் நேரில் சந்தித்தார், இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது, அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அதிமுகவில் முறையாக இணைந்து செயல்பட உள்ளேன், அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் முடிந்தால் நானே மற்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுவேன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் அவர் கூறினார். பாக்யராஜ் இந்த சந்திப்பு ஓபிஎஸ் தரப்புக்கு ஆறுதலையே ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தொடர்ந்து ஓபிஎஸ்சையும், அவரது அழைப்பையும் விமர்சித்து வரும் நிலையில், பாக்யராஜ்-ஒபிஎஸ் சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.