மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரேயும், அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டேயும் தங்களுக்கு ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருவரும் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி மனுக்கொடுத்துள்ளனர். இதையடுத்து வரும் 8-ம் தேதிக்குள் இரண்டு அணிகளும் தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை கொடுக்கவேண்டும் என்று ...

திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக காவிரி டெல்டா பகுதி மக்கள் குற்றம்சாட்டி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, 2020ம்ஆண்டு அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட ...

அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடக்கின்றன. சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று அதிமுக பல அணிகளாக பிரிந்து இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் இவர்களை யாருமே பிடிக்காத இவர்களால் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் எம். ஜி. ஆர் ஆதரவாளர்கள் அணி ஒன்றும் உள்ளது. இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ‘ஒன்றிணைந்த ...

கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி ஜாபர்சேட்டுக்கு வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அப்போதைய வீட்டு வசதி வாரிய அமைச்சரும், தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் நேற்று முன் தினம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. கடந்த 2006-2011 திமுக ...

கோவை செஞ்சிலுவை சங்கத்தின் முன்பாக இன்று பாமக சார்பில் குட்கா, கஞ்சா, மது, சிகரெட் ,ஆகியவற்றை தடை செய்யக் கோரியும், வரும் தலைமுறையை போதைப் பழக்கத்திற்கு ஆளாக வண்ணம், தடை செய்ய வேண்டும் என்று கூறி, பாமக கோவை மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக செய்தி ...

எரிபொருள் அதிகளவில் இந்தியாவில் செலவாகிறது. அதே சமயம் காற்று, ஒலி என அதிகளவில் இயற்கையை நாசம் செய்யும் நாடுகளிலும் இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கிறது. இன்னொரு புறம் டிராஃபிக் நெரிசல். வளர்ந்த நகரங்களில் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சமாக இரண்டு வாகனங்களையாவது வைத்திருக்கிறார்கள். சைக்கிள் என்பதே பள்ளி மாணவர்களுக்கானது என்பது போல் உருமாறிவிட்டது. இந்நிலையில், இந்தியாவில் விரைவில் ‘ஸ்கை ...

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், பெற்றோர், தத்தெடுத்த பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கப்பட்டு வருவதாக இதுபோன்ற குழந்தைகள் தன்னிறைவு பெறும் வகையில், அவர்கள் 23 வயதை எட்டும் வரை சுகாதார காப்பீடு மற்றும் கல்வி உதவிகள் வாயிலாக ...

நியூ எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பா.ஜ.க கண்டனம்.   கோவை : ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பாஜக கண்டனம்…!!! கடந்த வியாழனன்று ஆடி அமாவாசையினை முன்னிட்டு ...

முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கம் சான்றிதழை வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை ...

சென்னை: ‘மாணவர்கள் பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்த’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்த பிரதமருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கையில் பட்டத்துடனும், ...