டிடிவி தினகரன் திடீர் உடல்நல குறைவால் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

மமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடி வி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சை மீனாட்சி மெஷின் மருத்துவமனையில் டிடிவி தினகரன் அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.தினகரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அமமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.