கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. இதனால், மின் உற்பத்தி தடை, விலைவாசி உயர்வு என, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து ...

இந்தியாவின் 15வதுகுடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடி இன் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவைத் தேர்ந்தெடுத்தது. ...

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அடுத்த வாரம் வர உள்ளது. கடந்த ஜூலை 11- ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது என்று, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த ...

சென்னை: அடுத்த மாதம் மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நீர்வளத்துறை துரைமுருகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 2022-23- ம் ஆண்டுக்கான நிதிவருவாய் உள்ளிட்ட விசயங்கள் குறித்தும் ...

அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியது தான் தி.மு.க. அரசின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் ...

சமீபத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி  நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள பல அரசியல் தலைவர்கள் ...

இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று ...

சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் முருகப்பெருமாளின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் பல நூறு கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு கான்ட்ராக்ட் ...

தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ...

சென்னை: அதிமுக அலுவலகத்தின் சீலை நீக்கி அதன் சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து, ...