ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் 4வது மகள் உமா மகேஸ்வரி, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் இன்று தற்கொலை செய்துகொண்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது. என்.டி.ஆர் என்று அழைக்கப்படும் என்.டி.ராமராவ், மிக பழமையான தெலுங்கு தலைவர்களில் ஒருவர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், தெலுங்கு சுயமரியாதை முழக்கத்தில் 1982-ல் தெலுங்குதேசம் கட்சியை ...
*பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு* கோவை பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 – வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ...
தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம் என்ற வாசகத்துடன. பிரதமர் மோடி செஸ் விளையாடுவது போல கோவை நகரின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க”வினர் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் கோவை நகரில் அடிக்கடி திமுக அதிமுக இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக போஸ்டர் ...
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி. இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுகவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலைஞர் அவர்களின் 4-வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் ...
தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை வேகப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள்ள சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள்,அவர்களது ...
டெல்லி: நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று நாட்டு மக்களிடையே பேசியதாவது: தேசத்தின் 75-வது ...
தமிழ்நாடு காவல்துறையிடம் ஜனாதிபதி கொடி நேற்று ஒப்படைக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ...
தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாம் தங்களுக்கென்று செய்திச் சேனல்களை வைத்திருப்பதைப் போல தங்களுக்கும் ஒரு சேனல் வேண்டும் என்பது தமிழக பாஜகவின் நீண்ட நாளைய கோரிக்கை. பொன்னார் மாநில தலைவராக இருந்தபோதே இதற்காக சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ஏனோ அப்போது அது கைகூடவில்லை. இப்போது அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறதாம். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ...
மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரேயும், அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டேயும் தங்களுக்கு ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருவரும் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி மனுக்கொடுத்துள்ளனர். இதையடுத்து வரும் 8-ம் தேதிக்குள் இரண்டு அணிகளும் தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை கொடுக்கவேண்டும் என்று ...
திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக காவிரி டெல்டா பகுதி மக்கள் குற்றம்சாட்டி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, 2020ம்ஆண்டு அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட ...