காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல்: விறு விறுப்பாக நடைபெற்றது வாக்குப்பதிவு ..!

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததால், அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.அதன் பிறகு தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார்.

காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எவ்வளவோ சமாதானம் படுத்தியும், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார். ஆகையால் காங்கிரஸில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

இதில் காங்கிரஸின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடியாக களம் கண்டனர். இந்தியா முழுவதும் காங்கிரஸ் அலுவலகங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தியா முழுவதும் சுமார் 9,500 பேர் வாக்களித்து இருப்பதாக மத்திய தேர்தல் அமைப்பு தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில், காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.

இருப்பினும் மூத்த தலைவர்கள் இரண்டு பேர் போட்டியிட்ட இக்களத்தில், மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.