கோவை: பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பா் ஆழியாறு, திருமூா்த்தி என 9 அணைகள் உள்ளன. இதில் பரம்பிக்குளம் அணை பி.ஏ.பி திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை, ஒருமுறை நிரம்பிவிட்டால் ...
இந்தியாவில் ஜீ 20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த 16ஆம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறுவதற்கு முன்பு ஜி20 ...
தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்களிடையே மோதல் ஏற்படுவதாகவும், திராவிட மாடல் ஆட்சிக்கு அதுவும் ஒரு உதாரணம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 60 வயது தொடங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபட்டபின் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர ...
சென்னை: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது என்றும், திமுகவை ஆளுநர்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (நவ.23) நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ...
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், ரகு, இளையராஜா, அடிபுள் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் ...
விதிமுறை மீறி கட்டி வரும் கட்டிடம்: பூட்டி சீல் வைத்த கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அதிகளவு அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டிடம் கட்ட முறையான அனுமதி பெற்ற பின்னரே கட்டப்பட வேண்டும் என்ற விதியை நிறையபேர் பின்பற்றுவதில்லை. விண்ணப்பித்து உரிய காலத்தில் அனுமதி ...
உதய்பூர்: ராஜஸ்தானில் டிசம்பர் 5 முதல் 7ம் தேதி வரையில் ஜி-20 அமைப்பின் முதல் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை கொண்ட ஜி-20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் ...
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்துவரி போன்றவற்றின் விலையை உயர்த்தியதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதோடு விலை உயர்வை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதன் பிறகு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அடிக்கடி அதிமுகவை ...
தங்களின் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு. அரசு கேபிள் நிறுவனத்தை பலிகொடுக்க திமுக அரசு நினைக்கிறது என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற திமுக அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான, எளிய பொது மக்களை வாடிக்கையாளர்களாகக் ...













