புதுடில்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளன. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் போட்டியிட்டனர்.தலைவர் பதவிக்காக நடந்த தேர்தலில் கட்சியின், 9,915 பிரதிநிதிகளில், 9,500க்கும் மேற்பட்டோர் ஓட்டளித்தனர். நாடு முழுதும், ...
சென்னை: சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் ...
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என்று ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விசயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை ...
சென்னை : ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் செயல்படாமல் இருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விடை கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய வீரபெருமாள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி ஆகியோர் இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வாக்குமூலம் அளித்துள்ளனர். ...
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் ...
சென்னை: மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த இந்திய தூதர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர்.. தலைமை செயலகத்தில் இந்த சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்திய தூதர்கள் 10 பேர் கொண்ட குழுவாக நேற்று சென்னை வந்திருந்தனர்.. அவர்கள் கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து, அரசு விவகாரங்கள் குறித்து பேசினர். பின்னர் ...
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததால், அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.அதன் பிறகு தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எவ்வளவோ சமாதானம் படுத்தியும், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார். ஆகையால் காங்கிரஸில் தலைவர் ...
அதிமுக தொண்டர்கள் எனக்கு துணை நின்றால் போதும், அதிமுகவை ஒன்றிணைக்கும் வேலையை நான் பார்த்துக் கொள்கறேன் என சசிகலா தெரிவித்தார். அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம் தோட்டத்துக்கு வந்த சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ...
சென்னை: அலுவல் ஆய்வுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்றும் நாளையும் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா கோவி.செழியன், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி ...
சென்னை: ஜனவரியில் தமிழகம் முழுதும் பாதயாத்திரை செல்ல, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார்.வெளிநாடுவாழ் பா.ஜ., நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி கூறியதாவது: ‘தமிழகத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வேரூன்றியுள்ள திராவிட கட்சிகளின் கட்டமைப்பை உடைத்து, அந்த இடத்திற்கு பா.ஜ.,வை கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல. ஆனால், மெல்ல மெல்ல தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது’ ...