மிளகு, முட்டையுடன் சேர்த்து ரம் சாப்பிட்டால் கொரோனா பறந்துவிடும்…வீடியோ பதிவிட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட்- என்ன போச்சா…

ங்களூரு: மிளகு மற்றும் முட்டையுடன் சேர்த்து ரம் சாப்பிட்டால் கொரோனா தொற்று பறந்துவிடும் என்று வீடியோ பதிவிட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மங்களூரு அருகே நடந்துள்ளது.

தென்கனரா மாவட்டம், உல்லால் நகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவீந்திர ஹட்டி. இவர் அவ்வப்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவரை மாவட்ட தலைவர் கண்டித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில், அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், `மதுபாட்டிலை கையில் வைத்து கொண்டு, மிளகு மற்றும் முட்டையுடன் சேர்த்து ரம் சாப்பிட்டால் போதும் கொரோனா தொற்று பறந்து விடும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ நாடு முழுவதும் வைரலாக பரவியது. மேலும் கட்சியில் உள்ளவர்களுக்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் தவறான வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் கவுன்சிலர் ரவீந்தர ஹட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.