போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்களில் நிர்மலா சீதாராமனும் இடம்பிடித்துள்ளார்.
36வது இடத்தில் உள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து நான்காவது முறையாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில், 63 வயதான அமைச்சர் இந்த பட்டியலில் 37 வது இடத்திலும், 2020 இல் 41 வது இடத்திலும், 2019 இல் 34 வது இடத்திலும் இருந்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் ஆகியோர் போர்ப்ஸின் ஆண்டுதோறும் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். HCLTech தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (ரேங்க்: 53), செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) தலைவர் மாதபி பூரி புச் (ரேங்க்: 54), மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மோண்டல் (ரேங்க்: 67) உள்ளிட்டோர் அடங்குவர்.
மல்ஹோத்ரா, மஜும்தார்-ஷா மற்றும் நாயர் ஆகியோர் இந்த பட்டியலில் கடந்த ஆண்டும் 52, 72 மற்றும் 88வது இடங்களைப் பிடித்தனர்.
செவ்வாய்கிழமை ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலின்படி, இந்த ஆண்டு மஜும்தார்-ஷா 72வது இடத்திலும், நாயர் 89வது இடத்திலும் உள்ளனர்.
பட்டியலில் இடம் பிடித்த இந்திய பெண்களின் விவரம்:
1. 36வது இடத்தில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து நான்காவது முறையாக இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
2. HCLTech இன் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 53வது இடத்தைப் பிடித்துள்ளார்.
3. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவரான மாதபி பூரி புச், பட்டியலில் 54வது இடத்தில் உள்ளார்.
4. இந்திய ஸ்டீல் ஆணையத்தின் தலைவர் சோமா மொண்டல் 67வது இடத்தில் உள்ளார்.
5. பயோகான் லிமிடெட் மற்றும் பயோகான் பயோலாஜிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாகத் தலைவர் மற்றும் நிறுவனர் மஜும்தார்-ஷா 72வது இடத்தில் உள்ளார்.
6. அழகு மற்றும் வாழ்க்கை முறை சில்லறை விற்பனை நிறுவனமான Nykaa இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான Falguni Sanjay Nayar 89வது இடத்தில் உள்ளார்.
பட்டியலில் 39 CEO க்கள் உள்ளனர்; 10 நாட்டுத் தலைவர்கள்; மற்றும் 11 பில்லியனர்களின் மொத்த மதிப்பு 115 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
Falguni Sanjay Nayar சுயவிவரத்தை எடுத்துக்காட்டி, ஃபோர்ப்ஸ் பட்டியல் குறிப்பிட்டது, 59 வயதான தொழிலதிபர் “20 ஆண்டுகளாக முதலீட்டு வங்கியாளராக பணியாற்றினார். ஐபிஓக்களை வழிநடத்தினார் மற்றும் பிற தொழில்முனைவோர் அவர்களின் கனவுகளை அடைய உதவினார். 2012 இல், அழகு மற்றும் சில்லறை விற்பனை நிறுவனமான Nykaa ஐ தொடங்க தனது சொந்த சேமிப்பில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தார். 2021 இல் அதை பொது தளத்திற்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார், அதனை தொடர்ந்து இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார்”.
ஃபோர்ப்ஸ் வலைத்தளத்தின்படி, 41 வயதான மல்ஹோத்ரா 12 பில்லியன் அமெரிக்க டாலர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான அனைத்து மூலோபாய முடிவுகளுக்கும் பொறுப்பாவர். “1976 இல் ஷிவ் நாடாரால் தொட்ங்கப்பட்ட HCL, இந்தியாவின் ஐடி நிறுவனங்கள் உயர்வதில் ஒரு மையப் பங்காக மாறியது,” என்று குறிப்பிட்டது.
மார்ச் 1 அன்று, 56 வயதான புச், இந்தியாவின் 3 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பங்குச் சந்தை சூழலை மேற்பார்வையிடும் செபியின் முதல் பெண் தலைவரானார். ஜனவரி 2021 இல், இந்திய ஸ்டீல் ஆணையத்தின் (SAIL) தலைவராக இருந்த முதல் பெண்மணியான 59 வயதான மோண்டல், பொறுப்பேற்றதில் இருந்து நிறுவனம் நிதி வளர்ச்சியைப் பதிவு செய்ய வழிவகுத்தார்.
ஃபோர்ப்ஸ் இணையதளத்தின்படி, தலைமைப் பொறுப்பில் இருந்த முதல் ஆண்டில் நிறுவனத்தின் லாபம் மூன்று மடங்கு உயர்ந்து 120 பில்லியன் ரூபாயாக இருந்தது. உக்ரைன் போரின் போது அவரது தலைமைக்காகவும், கோவிட் -19 தொற்றுநோயைக் கையாண்டதற்காகவும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் 19 வது வருடாந்திர ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 2வது இடத்திலும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply