80 வயது ஆனாலும்.. 80 படம் எடுத்தாலும்.. 8 ஆயிரம் கோடி செலவு செய்தாலும்.. பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார்- அண்ணாமலை பேச்சு..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களிலுள்ள பள்ளிபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிடபட்டது.

இதையடுத்து தொழில் பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, “நமது நிலம் நமதே” என்ற பெயரில் குழு அமைத்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அன்னூர் – ஓதிமலை சாலையில் பா.ஜ.க சார்பாக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, தி.மு.க-வினர் கொள்ளைபுறமாக வருவது வழக்கம். பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட இருக்கின்றனர் எனவும் 80 வயது ஆனாலும், 80 படம் எடுத்தாலும், 8 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார் எனவும் உதயநிதி ஸ்டாலின் பற்றி அண்ணாமலை பேசியுள்ளார்.