சிம்லா: இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி காங்கிரஸ் ...

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பான முக்கிய அறிவுரைகளை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ளார். நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பொங்கல் பொருட்களுக்கு என தனியே பெறப்பட்ட (White Colour Bag) அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசி ...

கோவை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53) இவர் கோவை நஞ்சுண்டாபுரத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து ஆபாசமாகவும் ,அவதூறு பரப்பும் வகையிலும், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட பாஜக தலைவர் ...

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தது முதலாக திமுக கட்சி கொள்கைகள் குறித்தும், மத அமைப்பு குறித்ததுமான பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அடிப்படையில் கடவுள் மறுப்பு கொள்கையில் வளர்ந்த கட்சியாதலால் இவ்வாறான கருத்துகள் எழுந்தாலும், பல்வேறு மதம் சார்ந்த, கோவில் சார்ந்த வளர்ச்சி பணிகள் மூலம் தாங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதாக திமுக வெளிப்படுத்தி வருகிறது. ...

சென்னை: போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் ...

அதிமுகவின் தலைமைப் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற்றாலும் தாம்தான் கட்சியின் ஒற்றை தலைமையாக வருவேன் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு ...

பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கும் டோக்கன்: தி.மு.க கட்சியினர் கொடுப்பதாக புகார் – கோவையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொதுமக்கள் செல்போன் காட்சிகள் வைரல் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 1000, கரும்பு, அரிசி, மண்டவெல்லம் போன்ற பொருள்கள் ரேஷன் கடையில் ...

மதுரை: பொது நலன்கருதி டாஸ்மாக் மது விற்பனை வணிக நேரத்தை மதியம் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை குறைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் 2019 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மதுவிற்கு ...

நாடாளுமன்றத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2023-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பாஜக எம்பிக்களுக்கு அமைச்சராகும் வாய்ப்புகள் தெரிகின்றன. வரும் 2024 மக்களவை தேர்தலின் அரை இறுதிப்போட்டியாக இந்த வருடத்தில் நடைபெறவுள்ள 10 மாநில சட்டப்பேரவை தேர்தல் அமைந்துள்ளன. இதனால், அவற்றில் வெற்றிபெற, மத்தியில் ஆட்சி செய்யும் ...

தமிழகத்திலே மிகப்பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக கூட்டணி தொடர்பான குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பார். அதிமுகவை பொறுத்தவரை எந்த ஒரு கட்சியையும், எந்த ஒரு தனி நபரையும் துன்பறுத்தி பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கூட்டணி கட்சியை ...