புதுடெல்லி: திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) முன்னிலை வகிக்கிறது. திரிபுரா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சி திரிபுரா மக்கள் முன்னணி(IPFT) உடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ...

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே ...

சென்னை : நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஒரு ‘க்ளீயர்’ மெசேஜை கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது, தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்துக் கொள்கிறோம் என்பதும் நடைமுறைக்கு ஒவ்வாதது என காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி கட்சிகளின் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ...

தமிழ்நாடு சோசியலிச மற்றும் சமூக நீதிக் கருத்துகள் கொண்ட கட்சிகள் சங்கமிக்கும் தளமாக உள்ளது என தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (மார்ச் 1) தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதில் கலந்து கொண்ட பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, ...

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தான் தன் பதவி ஏற்பு உரையை முதல்வர் ஸ்டாலின் துவங்கினார். கடந்த 2021-ம் வருடம் மே 7-ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு உள்ளார். முதல்வராக பதவியேற்றதிலிருந்து இப்போது வரை இடைவிடாமல் அரசு நலத்திட்டம் வழங்கும் விழா, அரசு முறை ...

அமராவதி: இந்து மத நம்பிக்கையை பாதுகாக்க 3,000 கோயில்கள் கட்டப்படும் என்று ஆந்திர அறநிலையத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்திய நாராயணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்ய மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். ...

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் உள்ள சக்தி கேந்திர தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செயல்படுவதற்கான வழிகாட்டுதல் கூட்டம் பாஜக மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சவுக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நடைபெற்ற கூட்டத்தில் ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து, கடந்த ...

புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் முன் உரையாற்றுவதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் முன்னாள் மாணவரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன் உரையாற்றும் ராகுல்காந்தி, ’21ம் நூற்றாண்டில் பாடங்களைக் ...

லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் மோசமான சட்ட ஒழுங்கை கொண்டிருந்ததாகவும், தற்போது இந்த விஷயத்தில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து ...