இன்று சென்னையில் அண்ணாமலை உண்ணாவிரதம்..!

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று  உண்ணாவிரத போராட்டம்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறநிலையத்துறையை கண்டித்து இன்று  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. கோயில் நிலங்கள் சூரையாடப்படுவதாகவும், கோயில்கள் கணக்கில்லாமல் இடிக்கப்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியிருந்த நிலையில், அண்ணாமலை இந்த உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார்.