ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை இந்தியாவிற்கு தீபாவளி கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் அங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்பங்கேற்றார். அவருடன் ஆஸ்திரேலிய ...

ஆஸ்திரேலியாவில் இந்தியா்கள் அதிகமாக வசிக்கும் ஹாரிஸ் பூங்கா பகுதியில் ‘குட்டி இந்தியா’ என்ற நட்புறவு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்குப் பிரதமா் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினா். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய சமூகத்தினா் அந்நாட்டின் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றனா். அதைப் போற்றும் வகையிலும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவைச் ...

சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வாகனத்தணிக்கை, அபராதம் விதிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் அதிக அளவில் சாலை விதிமீறல்கள் ஈடுபடுதல் தொடர்பாக புகார்கள் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு வர தொடங்கியுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு ...

பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா பயணத்துக்குப் பின்னர் நேற்று ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பை ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் அளித்து இருந்தனர். இன்று இந்திய வம்சாவழியினர் இடையே மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இருவரும் சிட்னியில் பேசினர். சிட்னியில் குடோஸ் பாங்க் பகுதியில் நடந்த ...

தமிழ்நாட்டை 2030-31ம் நிதிஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையொட்டி, தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 ...

சுகாதாரப் பாதுகாப்பில் அதிக ஒத்துழைப்பின் அவசியத்தையும், உலகளாவிய சுகாதார சமத்துவத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் கொரோனா தொற்று நமக்கு புரிய வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக சுகாதார மாநாட்டின் 76 வது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ...

காங்கிரஸ் 56 ஆண்டுகள் நாட்டை ஆண்டபோதிலும் ஓபிசி வகுப்பினருக்கு எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற மோடி சமூகத்தின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, “காங்கிரஸ் எப்போதுமே ஓபிசி சமூகத்தை புறக்கணித்து வருகிறது. அவர்களுக்காக பாடுபடுவது பாஜக தான். காங்கிரஸ் 56 ஆண்டுகள் நாட்டை ஆண்டபோதிலும் ...

சென்னை: திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுரிடம் புகார் அளிக்க அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று கிண்டியில் பேரணி நடைபெறுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்்ளச் சாராயத்தால் ...

தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். நேற்று கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து கள்ளச்சாராயம் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் ...

திமுகவிலிருந்து மிசா பாண்டியன் நீக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மதுரை சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மிசா பாண்டியன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் ...