பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று இந்தியாவின் கோவாவுக்கு வந்தார். கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் ...

அதிமுகவுக்கு திரும்பி வர ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் ...

தீட்சிதர்கள் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக ஆளுநர் எழுப்பிய புகார் குறித்து தமிழக தலைமை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. கடந்த அக்டோபர் மாதம் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சிலர் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக, சிறுவர் – சிறுமியர் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது ...

நகர்ப்புறங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அடியோடு அகற்றுவதே தமிழக அரசு கொண்டுவந்த சாத்தியத்தின் நோக்கம் என்று கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப்பலகைகள் குறித்த, அரசின் நிலைப்பாடு மற்றும் உண்மைத்தன்மையை விளக்கும் அறிக்கையை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை ...

விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறை வாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவி தொகை வழங்கும் விழா -முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு… தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் எஸ் பிளனேடு சாலையில் இன்று விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவித்தொகையை முதல்வர் மு.க. ...

பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களை ரசித்து பார்வையிட்டு, குறைகளை கேட்டு அறிந்த வனத்துறை அமைச்சர் – பொதுமக்கள் பாராட்டு… கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற மேல் தொகுதியான வால்பாறை பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்க் கொண்டார். முன்னதாக அட்டகட்டி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை ...

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் மீண்டும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில் பா.ஜனதா தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு யுக்திகளை அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது. அதன்படி முதியவர்களுக்கு இந்த தேர்தலில் டிக்கெட் கொடுக்கவில்லை. அதிகளவில் புதுமுகங்களை களத்தில் அக்கட்சி இறக்கியுள்ளது. மேலும் ...

1,222 இடங்களில் திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்று திமுக ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை குறிப்பிடும் வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடத்தி அரசின் சாதனை விளக்கப்படும் என தலைமை அறிவித்துள்ளது. தமிழக்தில் வரும் மே 6,7,8 ...

மதிக்கப்படாத நீதிமன்ற தடை உத்தரவு: சுற்றுலாத் தளமான கொடைக்கானல் மலை சாலையில் புதிய டாஸ்மார்க் கடை –  நடவடிக்கை எடுக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை சுற்றுலா தளமான கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. அப்பகுதியில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து ...

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர்பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா, பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தமிழக பொருளாதாரத்தை வரும் 2030-ல் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ...