மதிக்கப்படாத நீதிமன்ற தடை உத்தரவு: சுற்றுலாத் தளமான கொடைக்கானல் மலை சாலையில் புதிய டாஸ்மார்க் கடை –  நடவடிக்கை எடுக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை

மதிக்கப்படாத நீதிமன்ற தடை உத்தரவு: சுற்றுலாத் தளமான கொடைக்கானல் மலை சாலையில் புதிய டாஸ்மார்க் கடை –  நடவடிக்கை எடுக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை

சுற்றுலா தளமான கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. அப்பகுதியில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு இருந்த மதுபான கடையை ஆளுங்கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் அந்த கடையை  அப்புறப்படுத்தி கொடைக்கானல் தேசிய நெடுஞ்சாலை மூளையறு வனப் பகுதியில் அமைத்து உள்ளனர். அப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அந்த கடையை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் சுற்றி காட்டுப் பகுதி என்பதால் காட்டு மாடு, மான் வரையாடு, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அந்த டாஸ்மாக் கடையை அமைத்து உள்ளனர். வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் இருந்து உடனடியாக அந்த மதுபான கடையில் அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது