சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு ...
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் ஒன்றாம் தேதியா அல்லது ஐந்தாம் தேதியா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.. தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான இணைய வழிக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. திருச்சியில் இருந்து இணைய வழியாக ...
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு ஜப்பான் சென்றடைந்ததாக தகவல் வெளியானது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் செல்வதற்காக சென்னையிலிருந்து கிளம்பினார் என்பது தெரிந்ததே. அவர் சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் சிங்கப்பூரில் உள்ள அமைச்சர்களையும் அவர் ...
சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் கலை பொக்கிஷம் ஒன்றும் இடம் பெற இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் தயாரான வெள்ளி செங்கோல் நிறுவப்பட உள்ளது. செங்கோலை பிரதமர் மோடியின் கையில் வழங்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இந்தியாவில் தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் ...
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய அவரது நண்பர் வீட்டில் சோதனை….. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் என ...
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கவுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார். ...
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா தான் 5 ஆண்டு முதல்வராக இருப்பார் என அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், மல்லிகார்ஜூன கார்கேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சியில் இருந்து விலகி இருக்கும் சூழல் ஏற்படும் என மிரட்டிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி ...
மிக பிரமாண்டமாகவும் அதி நவீனமாகவும் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் ...
ஒன்பது நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த நாடுகளில் தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பது குறித்து பல சந்திப்புகளை நடத்தவிருக்கிறார். வெளிநாடுவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுற்றுப்பயணம் செல்வதற்காக, இன்று மே 23-ம் தேதி, சென்னை விமான நிலையத்துக்கு வந்த முதல்வரை ...
பெங்களூரு: பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த நிலையில், அல்பானீஸ் இன்று மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். குவாட் உச்சி மாநாட்டின் கூட்டங்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் ...













