சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். டெல்லி மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் யூனியன் பிரதேசமாகவே இருக்கிறது. இதனால் அங்கே ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி இருந்தாலும், சில முக்கிய அதிகாரம் மத்திய அரசுக்கே இருந்து வருகிறது. ...

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்றார். ...

சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதில், சதிஷ் உட்பட 9 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவேரி நதிநீர் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழ் நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாகவும் ...

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10 மணி அளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு பெருநிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த ...

கலிபோர்னியா: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்காவின் கலிபோர்னியா கூட்டத்தில் காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் முழக்கமிட்டனர். ஆனால் ராகுல் காந்தி கோபப்படாமல் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ...

கரூரில் மின்துறை மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கிய ரெய்டு 6வது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில் இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒப்பந்ததாரர் வீட்டில் நடைப்பெற்ற ரெய்டில் அள்ள அள்ள பணம் சிக்கியுள்ளது. அந்த பணத்திற்கான கணக்கு கேட்கையில், ...

நாட்டின் ஏழைகளை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் கட்சி கொள்கையாக கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தியாவில் 9 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதை, நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ...

என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த ஒரு சிலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்த தகவலின்படி இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ...

 சென்னை கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளா கத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களை கொண்டுள்ளது. இம்மருத்துவமனையில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, ...