ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டிற்கு தான் மிகப் பெரிய பின்னடைவு – அண்ணாமலை பேட்டி..!

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக
தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்றார். அங்கு அவரை பங்குதந்தை குமாரராஜா வரவேற்றார். பின்னர் மெழுகுவர்த்தியை காணிக்கையாக வழங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிராத்தனை மேற்கொண்டார்.