செந்தில் பாலாஜியின் தம்பிக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை ரூ.10 லட்சத்துக்கு கணக்கு காட்டியிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. அந்த இடத்தில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாதான் இப்போது செந்தில் பாலாஜிக்கு செக் வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி செந்தில் ...

ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்து வரும் நிலையில், மருந்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அதில், சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இ-ஃபார்மசிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் சட்டவிரோத விற்பனையை சரிபார்க்கும் வகையிலும், தரவுகள் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற ஆபத்துகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், ...

உத்தர பிரதேச சட்டசபையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் இன்று முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி சட்டசபையில் எம்எல்ஏக்கள் செல்போன் கொண்டு செல்லவும், ஆவணங்களை கிழிக்கவும், சத்தமாக சிரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் ...

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைத்து பேச வைப்பதற்காக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கடந்த ஜூலை 26 ஆம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய் ...

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி எதிரில் உள்ள தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவினை  பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி எதிரில் உள்ள தோட்டக்கலை துறைக்கு 9 ஏக்கர் பரப்பளவிற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவ்விடத்தில் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்கா ...

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினர் என அழைப்பிதழ் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இரண்டாவது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியின் துவக்க விழா அழைப்பிதழ் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு ...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ...

மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது.நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத் தொடக்கத்திலேயே மக்களவையில் அமளி எழுந்தது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானம் மீது மக்களவையில் இன்று பகல் 12 மணிக்கு விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில், கௌரவ் கோகோய் (அசாம்) விவாதத்தைத் தொடங்கி ...

அமலாக்கத்துறைக்கு நேற்று இரவு செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது. இதையடுத்து நேற்று அவரை அலுவலகத்திற்கு இரவோடு இரவாக கொண்டு சென்றனர். மெலிந்த தேகத்துடன், செந்தில் பாலாஜி முகம் முழுக்க தாடியுடன் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று இரவு கிட்டத்தட்ட 9 மணிக்கே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுவிட்டார். அமலாக்கத்துறைக்கு சில மணி நேரம் ...

அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திமுக அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட ...