சென்னை: தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, சர்க்கரை மற்றும் பொருளில்லா குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ...

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’15-ஆம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக ...

பெங்களூர்: கிருஷ்ணா, கோதாவரி ஆற்று படுகையில் இருந்து முதல் முறையாக நேற்று கச்சா எண்ணெய் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் விரைவில் தினமும் 45 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார். இந்தியா ...

பிரான்சுக்கு புதிய பிரதமரை அறிவிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முடிவு செய்துள்ளதாகவும், இன்று அவர் புதிய பிரதமர் தொடர்பில் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சைப் பொருத்தவரை, பொதுவான கொள்கைகளை முடிவு செய்பவர் ஜனாதிபதி என்றாலும், அரசின் அன்றாட நிர்வாகத்தை கவனிப்பது பிரதமர்தான். ஆகவே, நாட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் அவர் தலைதான் ...

டாக்கா: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேச நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால், மற்ற 299 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வீட்டுச் சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் ‘வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி)’ உள்பட 15 எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. அதனால் 41.8 சதவீத வாக்குகளே ...

சென்னை: சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி அன்று ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கும் சுற்றுப்பயணம் செல்லக்கூடும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இந்தப் ...

புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் தேர்தல் கமிட்டி அமைக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே ...

புதுடெல்லி: பிஹாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி அடிக்கல் நாட்டி, பேட்டியா நகரில் உள்ள ராம் மைதானத்தில் உரையாற்றுகிறார். அப்போது முதல் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் சாலைகள், ...

அந்நாட்டு பாதுகாப்புச் செயலரை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவர், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் காலிஸ்தானுக்கு ஆதரவான வன்முறைகள் உள்ளிட்ட தீர்க்கப்படாத சில சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் அமையும் என ...

மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதச்சார்பின்மை மாநாட்டில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘கொஞ்சம் கொஞ்சமாக, தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன்’ என்று பேசினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதசார்பின்மை மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே கொடியேற்றத்துடன் தொடங்கியது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் மாநாட்டுக் கொடியை ...