அதிமுக இனி உடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுக எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள எட்டிக்குட்டைமேடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி கொடியை ஏற்றிவைத்தார். அப்போது, பேசிய அவர், தமிழ்நாட்டில் மக்கள் வாழ முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டதாக ...

திருப்பத்தூர்: அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத். திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பளாராக வினோத் உள்ளார். இவர் ...

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அதாவது ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமை தொகை, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதியோர் உதவித் தொகை ...

அண்ணாமலையில் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஊடக பிரிவு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து இன்று பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு ...

திமுக எம்பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு எதிரான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த ஆலையில் பணிபுரிந்த, பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு, ...

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் ...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை ஒருங்கிணைந்த அதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபகாலமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் மற்றும் ...

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோக்களின் சாவியை வழங்கினார். அப்போது கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஆட்டோவை ஆய்வு ...

அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருப்பவர் எஸ் பி வேலுமணி. இவர் கொங்கு மாவட்டத்தில் திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதில் கோவை பகுதியில் நடைபெறும் எந்த ஒரு கோயில் திருவிழாவிற்கும் நேரில் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அதன்படி ஏற்கனவே கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோயில் ஒன்றில் ...

டெல்லி: மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது; எனது இதயம் கனத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலை குறிவைத்து 26 எதிர்க்கட்சிகளும், பாஜ கூட்டணி கட்சிகளும் ஒரே நாளில் போட்டிக் கூட்டம் நடத்திய நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ...