இந்தாண்டுடன் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடடிவடையும் நிலையில், மொத்தம் 679 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சமீபத்தில் அறிவித்தார். 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். ...

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் கடந்த வாரம் சென்னையில் போராட்டம் நடத்தினர். பணி நியமனம், சம வேலை சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அரசுக்கும் – ஆசிரியர்களுக்கும் உடன்பாடு ...

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஒய்.எஸ்.ஆர்.டி.பி. என்ற கட்சியைத் தொடங்கி தெலங்கானாவில் கால் பதிக்க பல கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் அவரது தங்கை ஷர்மிளா. ஆனால் பெரிதாகச் சோபிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்த அவர், உள்ளூர் முதல் டெல்லி வரை ...

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியை மேம்படுத்த ஆளுநர் ரவி ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்று சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி ஆளுநர் ரவியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மக்களின் கோரிக்கையை ...

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸின் கட்சியில் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று கலந்தாலோசித்தனர். இதில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசப்பட்டது. இன்று அக்டோபர் 9ம் தேதி திங்கள் கிழமை, டெல்லியில் உள்ள அகில ...

சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி ...

தமிழ்நாடு மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கியமாக காவிரி விவகாரம் குறித்து தீமானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி ...

வள்ளலார் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வள்ளலார் நெற்றியில் திருநீறு இல்லாத புகைப்படத்தை பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பிறப்பால் சாதி வேறுபாடு காண்பதைக் கண்டித்து, எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் என்ற ...

சென்னையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு பகுதியில் ...

பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்று கூறினார். மேலும், நடைபயணம் நிறைவு நாளில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று கூறினார். தமிழக பா.ஜ.க அண்ணாமலை, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்து பேசிய கருத்துகளால் 2019-ம் ஆண்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ...