ஆன்லைன் சூதாட்ட மசோதா திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை கவர்னர் வெளியிட வேண்டும் என்றும் அந்த காரணத்தை மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி நேற்று திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து இன்றைய ...

தமிழ்நாட்டில் 10 மாவட்ட அலுவலகங்களை திறக்கும் நிகழ்ச்சிகளில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பங்கேற்க இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமார், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, அதிமுக-பாஜக இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. மேலும், தன்னை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு பாஜக ...

கோவை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) 11-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பல்லாயிரகணக்கான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பை முடித்து கொண்டு ...

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் மூலம் நாடு முழுவதும் பலர் தற்கொலை செய்து கொண்ட அவல நிலை நீடித்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்போதிருந்த் அதிமுக அரசு அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது. பின்னர் உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் ...

கோவை : கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மைக் முன்பு இருந்த தனது படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர்த்து அகற்றிவிட்டு மேடையில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் பாஜக சார்பில் மகளிர் தின விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா மேடையில் ஏறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, போடியத்தில் ...

ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மாலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ...

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதுவையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் ...

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டனர். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்த போட்டியை ...

அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றதிலிருந்து நடைபெற்ற 2019 நாடாளுமன்ற மற்றும் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் முழுமையாக திமுகவுக்கு சென்று விட்டன. இதுவே அதிமுக தோல்வியடைய காரணம் என சி.வி சண்முகம் உட்பட பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக பேசினார். அதே போன்று ...

ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ...