விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் சட்டவிரோதமாக பொதுமக்களை திமுக அடைத்து வைத்துள்ளதாக கூறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையிலான பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று சானிமேடு பகுதியில் திமுகவினருக்கு பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியத்திலுள்ள கடையம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், ...

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமான சேவை எம்பிக்கள் குழு ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு. இதுகுறித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா, கரூர் எம்பி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் எம்பி முரசொலி ஆகியோருடன் நானும் ...

டெல்லி: லோக்சபாவில் இன்று பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று விமர்சித்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சை குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் எனப் பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார். இன்று லோக்சபாவில் விவாதம் அனல் பறந்தது. முதலில் பேசிய ...

டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் மக்களவை சார்பில் வாழ்த்து என அவர் தெரிவித்துள்ளார். ...

சிவகங்கை மாவட்டம் அமமுக நகர செயலாளர் மகள் தாரிணி திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த நிலையில் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார் மாணவியின் தந்தை பாலாஜி. திருச்சி மாவட்டம் சமயபுரம் ...

திருச்சி மாவட்டம், துவாக்குடி திருவெறும்பூா் வட்டங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் படைக்கலன் தொழிற்சாலைகளை நம்பி ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் பெல் நிறுவன ஆா்டா்கள் குறைந்ததால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து சிப்காட் மூலம் தொழில்துறையில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் சிறு குறு ...

யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. மன அழுத்தம், நீரிழிவை தவிர்ப்பது, உடல் ஆரோக்கியம் , உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைப்பது , நுரையீரல் பிரச்சனைகள், அல்சர் பிரச்சனைகள் , மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் யோகாசனம் செய்வதால் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ...

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து ...

சென்னை: தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சபைக்கு வர அனுமதி இல்லை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்ததனால் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வர அனுமதி கொடுத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட பிறகு ...

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பதற்றமான நிலை நீடிக்கிறது. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்ட்ம இன்று காலை தொடங்கியது, கேள்வி நேரத்தின் ஆரம்பிக்கும் போதே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்சனையை எழுப்பினர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினார். ...