டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 11 ரூபாய், டீசலுக்கு 6 ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். எனவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரை சுமார் 600 நாட்களுக்கு மேலாக எந்த ...

பிகாா் முன்னாள் முதல்வரும் சமூக சீா்திருத்தவாதியுமான மறைந்த கா்பூரி தாக்குருக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கான முழுப் பெருமையும் பிரதமா் நரேந்திர மோடியையே சேரும்’ என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா். பிகாா் முதல்வராக கா்பூரி தாக்குா் இருந்தபோது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் ...

சென்னை :பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாகி உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு ஆட்களை அழைத்து வர கொடுத்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று பாஜக மாவட்ட துணை தலைவர் ...

கோவை :தி.மு. க.கோவை மாநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தவர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன்(வயது 65) இவர் காளப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து சாலையில் வசித்து வந்தார்.இன்று அதிகாலை 5 மணி அளவில் தங்கி இருந்த அறையில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து ...

சென்னை: சென்னையில் உள்ள போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த சசிகலா, மீண்டும் அதேபகுதியில் உள்ள புதிய வீட்டில் கோ பூஜை செய்து நேற்று குடியேறினார். எம்ஜிஆர் மறைவுக்கு முன்பிருந்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், அவரது சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்தவர் ...

என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் ஈடுபட்டிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மோடியை விட்டா வேறு பிரதமர் வேட்பாளர் இல்லையா என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளாரே? ஒரு முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி பேசுவது சரியா? கே.பி.முனுசாமிக்கு அண்ணாமலை மீது வன்மம். அவருடைய பாணியிலேயே பதில் ...

புதுடில்லி : சுதந்திரத்திற்கு பின் நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் அரசியலில் நீடிக்கும் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் என்ற அரக்கர்களுக்கு, பெண்கள் மற்றும் இளைஞர்கள் முடிவுகட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 127வது பிறந்தநாள், பராக்கிராம தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. புதுடில்லியில் ...

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் தற்போது கர்நாடகா அரசின் கருவூலத்தில் உள்ளது. சட்ட நடவடிக்கைக்காக ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சிபிஐ சிறப்பு ...

பாஜகவினர் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதால் ராமரைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்; சீதா தேவியை புறக்கணிக்கிறார்கள்’ என்று பாஜகவை சாடியுள்ளார் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி. பிரதமர் மோடி தலைமையில் அவரை முன்னிறுத்தி நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’யின் முக்கியத் தலைவரான மம்தா பானர்ஜி ...

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. எனவே நாடு முழுவதும் கூட்டணி குறித்து, தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுகவும், தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே திமுக நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்ற நிலையில், சேலத்தில் பிரமாண்டமாக இளைஞர் அணி மா நாடு நடைபெற்றது. இதற்கு முன்னதாக தேர்தல் தொகுதிப் ...