சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடவடிக்கை என முதலமைச்சர் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவருக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதல் சம்பவம் முதல் பொள்ளாச்சி, கோடநாடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ...

சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டதாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இரண்டாவது நாளாக இன்று இறுதி ...

கர்நாடக சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதன்படி, புலிகேசி நகருக்கு கர்நாடக மாநில அவைத்தலைவர் அன்பரசனை களமிறக்கி விட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. அதேபோல, பன்னீரும் தனது தரப்பில் புலிகேசி நகர் தொகுதிக்கு எம்.நெடுஞ்செழியன், கோலார் தங்கவயல் தொகுதிக்கு அனந்தராஜ், காந்தி நகர் தொகுதிக்கு கே.குமார் என்பவரை நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், கர்நாடகத் ...

பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்துள்ளார்… இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 ...

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா, இவைகள் எல்லாம் யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தந்தார். நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 12 மணி நேர வேலை மசோதாவுக்கு ...

சென்னை: ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை. நேற்றிரவு வரை 80 தமிழர்களின் விவரங்கள் ...

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதும் ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ...

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அவரின் பதவி பறி போக இருப்பதாக சில உடன்பிறப்புக்களே தகவலை கசிய விட்டு வருகின்றனர். தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் மீதும், சில திமுக முன்னோடிகள் மீதும் சொத்துக் ...

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் சாதகமாக வந்திருந்தன. இருப்பினும், தேர்தல் ஆணையம் முறையாக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளராக அங்கீகரிக்காமலிருந்தது. பிறகு எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இப்படியான சூழலில் தேர்தல் ஆணையம், எடப்பாடி ...

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேறியது. சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை ...