வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா… கடும் எதிர்ப்பை மீறி சட்டப் பேரவையில் நிறைவேற்றம்..!

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேறியது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தி.மு.க-வின் இரண்டு ஆண்டுக்கால ஆட்சி இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக இருக்கிறது. `திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டின் அரசாக இருக்கிறது. மொழி உரிமை, இன உரிமை என்பதே சாசனம். இலவச மின்சாரம் கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது.

காவல்துறையினரின் செயல்பாட்டில் குற்றம் குறை இருக்கலாம், குறையே இல்லை என்று சொல்ல மாட்டேன். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர், சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளி யாராக இருந்தாலும், காப்பாற்ற மாட்டோம் என்று உறுதி கூறுகிறேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத்தொட்டியில், மனிதக்கழிவுகள் கலந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படாத நிலையில், சி.பி.சி.ஐ.டி-யின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. குற்றவாளிகள் நான்கு மாதங்கள் ஆகியும் கைதுசெய்யப்படாத சம்பவம் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி போலீஸார் தங்களுடைய விசாரணையில் 11 பேர்மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக்கழிவு ஒரு பெண், இரண்டு ஆண்களுடையது என்ற நீர் பகுப்பாய்வு மையம் வெளியிட்டிருக்கிற சோதனை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. மேலும், 2 பெண்கள் உட்பட 11 பேரின் டி.என்.ஏ பரிசோதனையும் நடைபெறவிருக்கிறது. அதே மாதிரி குரல் மாதிரி பரிசோதனையும் இன்று நடத்தப்படவிருக்கிறது. இதனால் வேங்கைவயல் விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.