நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருவதால் புல்வெளிகள் பனி போா்த்திய நிலையில் வெண்மையாக காட்சியளிக்கின்றன. புற்கள் மற்றும் வாகனங்களில் வெண்மையாக படா்ந்துள்ள உறைபனியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனா். கடும் ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, கணபதி கார்டனை சேர்ந்தவர் கற்குவேல் அய்யனார், இவர் துபாயில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஹேமா. இவர்களின் மகன் ஹரிஹரன் ( வயது 21) இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .தற்போது அந்த நாட்டுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியதால் ஆன்லைன் ...

அமெரிக்க விண்வெளி நிறுவனமாக நாசாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏசி சரனியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். உலகில் முன்னணி விண்வெளி நிறுவனமான நாசா பல புதிய கண்டுபிடிப்புகளையும்,தகவல்களையும் உலகிற்கு தெரியப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்ற உலகெங்கிலும் உள்ள திறமையானவர்கள் போட்டியிடுவர். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற்னர். தற்போது ...

இந்தியாவின் மொத்த நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 24.58 சதவீதம் வரையில் உயர்ந்து 14.71 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இந்திய அரசின் நேரடி வரி வசூலில் ஏற்பட்ட தடாலடி உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணமாகத் தனிநபர் வருமான வரி அதிகரிப்பு பெரும் பங்கு வகித்துள்ளது ...

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். திருவாரூரில் சோலார் பூங்கா உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் சோலார் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வழக்கமான மின்சாரத்திற்கு மாற்றாக, மின் உற்பத்தி செய்வதில் ஒட்டுமொத்த நாட்டிற்கே ...

உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவை விமான நிலையம், 13வது இடத்தை பிடித்துள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் ஓஏஜி நிறுவனம் உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், கோவை ...

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப் பேரவையில் இன்று தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார். இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2ம் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 3வது நாளான நேற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி நேரம், ...

சென்னை: தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து மேலும் 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஓசூர், வேலூர் நகரங்களில் இன்று முதல் மக்கள் விரைவான 5ஜி சேவையை பெற முடியும். இந்த புதிய 5ஜி சேவையை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி ...

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை காண இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனியில் ...

சென்னை:”இந்தியா — ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்; கூடுதலாக, 81 ஆயிரத்து, 710 கோடி ரூபாய் ஏற்றுமதி வாய்ப்பும் கிடைக்கும்,” என, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை செயலர் பாலாஜி தெரிவித்தார். இந்தியா — ஆஸ்திரேலியா பொருளாதார கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ...