பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் 6G தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். 2017 ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி சமூக பிரச்சனைகள் அரசு நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,நேற்று இந்த ஆண்டுக்கான ஸ்மார்ட் ...
பாசி நிதி நிறுவனம் வழக்கு: குற்றவாளி இருவருக்கு 27 ஆண்டு சிறையும் 171.74 லட்சத்தி 50 ஆயிரம் அபராதம் – கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றம் தீர்ப்பு!!! திருப்பூர் பகுதியில் பாசி நிதி நிறுவனம் நடத்தியவர்கள் மோகன்ராஜ் கமலவல்லி கதிரவன் இவர்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு ...
சுங்கச்சாவடிகளில் ஆண்டு தோறும் சுங்கக் கட்டணம் உயர்த்தும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காண சுங்கக் கட்டண உயர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு அமைப்பதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை ...
தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 40 லட்சம் மோசடி: போலி நகைகளை அடைத்து அடகு வைத்த பெண் ஊழியர் கைது கோவை குனியமுத்தூர் ஐ.சி.எப் பின்காரப் நிதி நிறுவனம் மேலாளர் வினோத்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். நிதி நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த போது போல நகைகளை அடகு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும். 201- 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ...
திருப்பூர்: தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் வளரும் ஊராக திருப்பூர் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் பல்வேறு தொழில்களில் முன்னேறி வருகிறது எனவும், திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர ...
புதுடெல்லி: சுங்கச் சாவடிகளில் அமலில் உள்ள ஃபாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதியதாக நம்பர் பிளேட் ரீடர் திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக ெசல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால ...
வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என பார்க்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர், கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, சகோதரர் திலீப்குமாருடன் மோட்டார் ...
கோவை பீளமேட்டில் தற்போது உள்ள பன்னாட்டு விமான நிலையம் 627 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ராணுவத்துக்கு சொந்தமான 135 ஏக்கரும், புறம் போக்கு நிலம் 30 ஏக்கரும், தனியாருக்கு சொந்தமான 462 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் ராணுவத்துக்கு சொந்தமான நிலம் மற்றும் புறம்போக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டன. தனியாருக்கு ...












