கோவையில் மாணவ- மாணவிகளுடன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று நேரில் சந்திப்பு..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன் இவர் பொறுப்பேற்ற நாள் முதல் கஞ்சா, போதை மாத்திரை, குட்கா போன்ற போதை பொருள்களை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.இவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கல்லூரி பள்ளிக்கூடங்களில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் போலீஸ் கமிஷனருடன் காபி”என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.இதன்படி கோவை பீளமேடு,கோட்டைமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுடன் இன்று நேரில் சந்தித்து உரையாடினார். அவர்களுடைய
கேள்விகளுக்கு பதில் அளித்து விழிப்புணர்வு தன்னம்பிக்கை ஏற்படுத்தினார். அவர்களுடன் காபி-பிஸ்கட் அருந்தி மகிழ்ந்தார்.இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் 2 மாநகராட்சி பள்ளிக்கூடங்களை சேர்ந்த 84 மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.முன்னதாக கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் முருகவேல் அனைவரையும் வரவேற்றார்.கலாம் பவுண்டேஷன் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழா முடிந்ததும் பள்ளி மாணவ- மாணவிகளுடன் போலீஸ் கமிஷனர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.