தமிழகத்தில் 36 மாவட்டப்பதிவாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை, திருச்சிராப்பள்ளியில் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வருமானவரித்துறை செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தது. இந்த நிலையில், சென்னை, திருநெல்வேலி மண்டலங்களில் பதிவாளா்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி வெளியிட்டுள்ளாா். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளா், ...
இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தக்காளி விலையைத் தொடர்ந்து பச்சை மிளகாய், பருப்பு வகைகள் பிற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த வாரம் முதலே தக்காளி விலை சதமடிக்க தொடங்கியுள்ளது. ஒரு புறம் பெட்ரோல்,டீசல், வெங்காயம் தக்காளி, மற்ற காய்கறிகளின் விலையேற்றத்தால் நடுத்தர ...
சென்னை: பணியில் இருக்கும்போது போலீஸார் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாநகர போலீஸார் அனைவருக்கும் அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு மற்றும் சாலைகளில் போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்ய ...
சிறைகளில் உள்ள PCP கேன்டீன்கள் மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு முழுமையாக பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளன அனைத்து மத்திய சிறைகளிலும், மாநிலத்தில் உள்ள பெண்களுக்கான சிறப்பு சிறைகளிலும் (SPW) சிறைவாசிகள் சொந்தப் பணக் கணக்கு (PCP) கேன்டீன்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. பிசிபி கேன்டீன்கள் சிறைவாசிகளின் நலனுக்காக சோப்பு, பிஸ்கட், டீ, காபி, பன், டூத் ...
பவானி: ஈரோடு மாவட்டம், பவானியில் அமைச்சர் முத்துசாமி நேற்று அளித்த பேட்டி: தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ‘டெட்ரா பேக்’கில் விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கர்நாடகா, பாண்டிச்சேரியில் ‘டெட்ரா பேக்’ மூலமும், ஆந்திராவில் பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மது விற்பனை நடைபெறுவதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து ...
புதுடில்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களில், ஜூலை- செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதங்களை, 0.30 சதவீதம் வரை உயர்த்தி நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி, அதன் குறுகிய கால ரெப்போ வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் அளவுக்கு உயர்த்தி, 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, வங்கிகளும் டெபாசிட்டுகளுக்கான வட்டியை அதிகரித்தன. ...
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல முன்னணி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த மின்சார வாகன உற்பத்தியில் 50 சதவீதம் அளவுக்கு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் 7 ...
தமிழ்நாடு மொக்கன்டைல் வங்கியில் ரூ.4,110 கோடிக்கான கணக்கு இல்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மொக்கன்டைல் வங்கி நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகளோடு செயல்படுகிறது. இந்த வங்கி மீது வந்த சில புகாா்களின் அடிப்படையில் வருமான வருமானவரித்துறையினா் கடந்த 27, 28ஆம் தேதிகளில் திடீா் சோதனை நடத்தினா். ...
சென்னை: தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளும் தொடர்கின்றன. நாடு முழுவதும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக தற்போது மின்சாரத்தை ஒரு நாளின் எந்த ...
தமிழகத்தில் முக்கிய உயர் பதவிகளில் இருந்து வரும் இரு அதிகாரிகளின் பணிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தமிழக அரசியலில் முக்கியமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டின் டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு அவர்களின் பனிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அடுத்தபடியாக டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே நிலவி வந்தது. அதன்படி ...